ஆரம்ப கால வழிபாடு
1920 ம் ஆண்டளவில் சாட்டி விதி வேலணை என்னும் முகவரியில்அரசமரத்தடியில் கீழாக வைரவர் சூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் எங்கள் ஊர்ச்சைவப் பெருமக்கள் வழிபாடு செய்து வந்தனர்
ஆலயமாகத் தோற்றம் பெற்றமை 1970ம் ஆண்டளவில் திரு. கந்தையா வேலுப்பிள்ளை எனும் அடியவரால் சிறு ஆலயம் ஒன்று தற்போது வைரவர் சூலம் காணப்படும் இடத்தில கட்டப்பட்டது. இவரது முயற்சியில் திரு. நாகலிங்கம் என்பவரும் திரு. அருணகிரி, திரு. தியாகராஜா ஆகிய வர்த்தக பெருமக்களும் பெரியதும் ஆதரவளித்தனர். சேது கண்ணையா உள்ளிட்ட வேறு சிலரின் பொருளுதவியும் உடல் உழைப்பும் மேலும் வலுச் சேர்ந்தது.
1980.01.01ம் திகதி முதல் திரு. கந்தையா வேலுப்பிள்ளை அவர்களை தர்மகர்த்தாவாக கொண்ட பரிபாலன சபையொன்று உருவாக்கப்பட்டு மண்சுமந்தான்பதி ஸ்ரீ நரசிங்க வைரவர் கோவில் என்கின்ற திருநாமத்துடன் 1980.09.03ம் திகதி சுபநாளில் முதன் முறையாக பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் செய்யத் திருவருள் கை கூடியது.
இதனைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு வரை தினசரி பூசைகளும் விசேட பூசைகளும் ஒழுங்கு முறையாகவும் சிறப்பாகவும் நிகழ்ந்தேறியது.
1990ம் ஆண்டு சித்திரை இடப் பெயர்வுடன் ஆலய வழிபாடும் பரிபாலனமும் கைவிடப்பட்டது .
தர்ம கர்த்தா மறைவு :
ஆரம்பகால தர்மகர்த்தவனா திரு. கந்தையா வேலுப்பிள்ளை இக்கால பகுதியில் காலமாகியதைத்தொடர்ந்து 2003ம் ஆண்டு வரை எவரின் முயற்சியும் ஆர்வமும் அற்றுப் போன நிலை ஏற்பட்டதால் ஆலயமும் கவனிப்பார் எவருமின்றி கைவிடப்பட்டது.
முறைகேடான செயற்பாடுகள்
பரிபாலனம் எதுவும்மின்றி காணப்பட்ட ஆலயத்தின் பின்மாணிப்பாவனை வேறு சிலரின் கைகளுக்கு இடம் மாறியதுடன் ஆலயத்தின் தளவாடங்கள் பெறுமதிமிக்க வழிபாட்டு பொருட்கள் சமையல் பாண்டங்கள் யாவும் களவாடப்பட்டன.
புனர்நிர்மாணமும்
மகா கும்பாபிஷேகம் காலமாகிய ஆரம்ப கால தர்ம கர்த்தாவான திரு. கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் குடும்பத்தினர் இடம் பெயர்வின் பின்னர் சொந்த மண்ணுக்கு திரும்பிய அவர்தம் குடும்பத்தினரும் புலம்பெயர் குடும்ப அங்கத்தினரும் முயற்சியால் ஆலயம் சீர் செய்யப்பட்டு வர்ண வேலைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ம் திகதியன்று இரண்டாம் முறையாகவும் மகா கும்பாபிஷேகம் செய்ய வைரவப் பெருமானின் திருவருள் கைக்கூடியது.
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் மகன் திரு. வே.கணபதிப்பிள்ளையினதும் வேறு சில அயலவர்களினதும் முயற்சியால் மீண்டும் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு ஆலயம் ஒளிபெற்றது.
ஆலயப்பதிவும் தற்போதைய சுபிட்ச நிலைமையும்
02.12.1998ம் திகதியன்று HA/5/JA/580 எனும் பதிவிலக்கத்தின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதியப்பட்டது மேலும் 2007.03.13ம் திகதியன்று யாழ்ப்பாணம் இந்து சமய பேரவையில் மண்சுமந்தான்பதி ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி திருக்கோவில் எனும் பெயருடன் ஆலயம் பதிவு செய்யப்படுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. இன்று வரையில் தினமும் ஏககாலபூஜை அந்தணப் பெருமகனாரால் நிகழ்த்தப்படுகிறது. அத்துடன் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம் (வேலுப்பிள்ளை குடும்பத்தினரால் ) மகா பரணி நவராத்திரி, திருவெண்பாவை ஆகிய தினங்களில் விசேட பூசைகளும் நடைபெறுகின்றன.
வருடந்தோறும் கும்பாபிஷேக தினத்தன்று திரு. வேலுப்பிள்ளை யோகராசா அவர்களுடன், மகேஸ்வர பூசையினை திரு. வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை குடும்பத்தினரும், சில அடியவர்களும் இணைந்து 108 சங்காபிஷேக வைபவத்தையும் நிகழ்த்தி வருகின்றனர்.இவையாவும் அவன் அருளாலே அவன்தான் வணங்கி என்ற சிவபுராண வரிகளுக்குகளமய வேலணை வங்களாவடி மண்சுமந்தான்பதி ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமியின் கடாட்சம் என்றே எண்ணுகின்றோம். தற்போதைய ஆலய வளர்ச்சிக்கு திரு. வேலுப்பிள்ளை யோகராசா அவர்களே பெரும் பங்காற்றுக்கின்றனர்.



