வேலணை மண்சுமந்தான் பதி அருள்மிகு ஸ்ரீநரசிங்க வைரவப்பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் 03.04.2016 அன்று மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. ஆலய அறங்காவலர் திரு.வே.கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த மகாகும்பாபிஷேக நிகழ்வினை ஊரெழுவினைச்சேர்ந்த பிரதமகுரு சிவஸ்ரீ வித்தியாதரக்குருக்கள் அவர்கள் கிரியைகளை நடாத்தினார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற சமயக்கிரியைகளைத்தொடர்ந்து வைரவப்பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை இங்கு காணலாம். நல்லை குருமகாசந்நிதானம் ஸ்ரீ சோமசுந்தர பரமார்ச்சார்ய சுவாமிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசி வழங்கினார்.


